கவிதைகள் – ஒரு நொடி

பா.கங்கா

நம் வாழ்வையே மாற்றும்
அந்த ஒரு நொடி
எங்கே
எப்போது
எப்படி
வருமெனத் தெரியாது
அந்த ஒரு நொடி
நம்முன்
எதிர்படும்போது
நம்மை நாம்
இழக்கலாம்
மறக்கலாம்
உணரலாம்
இந்த உலகமே
தலைகீழாகவும்
இடம்பெயரலாம்
அந்த ஒரு நொடியை
எதிர்கொள்ளும்வரை
எல்லாம் என்னால்
என்ற அறியாமையும்
என்னால் எதுவும்
முடியாது என்ற
நம்பிக்கையும்
பற்றுக்கோடாய்
நம் முன்.

[email protected]