சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2024

0
957
மஹேஷ்

இறுதி மொழி

ஈராண்டுகளுக்கு ஒருமுறை சிங்கையின் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளான ஆங்கிலம் சீனம், மலாய், தமிழ் மொழிகளில் வெளியான படைப்புகளுக்கு வழங்கப்படும் “சிங்கப்பூர் இலக்கியப் பரிசு” இந்த ஆண்டும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த செப்.10 அன்று பெருமை மிக்க விக்டோரியா தியேட்டர் அரங்கில் நிகழ்ந்தேறியது. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்பே இறுதிப்படியலுக்குத் தேர்வான நூல்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வான அனைத்து எழுத்தாளர்களுக்கும் சாதனைச் சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னர் செப்.10 அன்று நிகழ்ந்த சிறப்பு விழாவில் பார்வையாளர்களின் பலத்த ஆரவாரத்திற்கிடையே பரிசு பெற்ற நூல்கள் அறிவிக்கப்பட்டு, படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற அனைத்து படைப்பாளர்களும் தங்கள் எழுத்துப்பயணம் குறித்து ஓரிரு நிமிடங்கள் பேச வாய்ப்பும் வழங்கப்பட்டது.

வழமையாக புனைவு, அபுனைவு, கவிதை, மொழிபெயர்ப்பு என்ற வகைகளில் பரிசுகள் அளிக்கப்பட்டுவந்தன.  இந்த ஆண்டு முதல் முறையாக ‘சிறந்த அறிமுகம்’ ‘சித்திரக் கதைகள்’ என்ற புதிய வகைகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன. காலத்தின் தேவையில் ‘மாங்கா’ சித்திரக்கதைகள் இளையர்களிடம் பெரும் வாசிப்பில் உள்ள நிலையில் இது மிகவும் வரவேற்கத்தக்கது. போலவே படைப்புலகில் நுழையும் புதிய எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய அறிமுகம் விருதும் சிறப்பு.

பரிசு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும், இறுதிப்படியலில் இடம் பிடித்தவர்களுக்கும்  ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ் மொழியில் விருது பெற்ற படைப்புகள்

வகை: புதினம்
பரிசு: சீனலட்சுமி [கி. கனகலதா] 
இறுதிப்பட்டியலுக்குத் தேர்வானவை:   ஆழிப்பெருக்கு [மணிமாலா மதியழகன்] சம்செங் [பொன் சுந்தரராசு] பொன்மனமிருந்தால் புவி வசமாகும் [யூசுப் ராவுத்தர் ரஜித்] வேர்களைத் தழுவும் விழுதுகள் [யூசுப் ராவுத்தர் ரஜித்]
வகை: புதினம் அல்லாதவை
பரிசு: அப்பன் [அழகுநிலா]
இறுதிப்பட்டியலுக்குத் தேர்வானவை:   ஆதிநிலத்து மனிதர்கள் [வரதராஜன் ஹேமலதா] பன்மொழித் தமிழன் [முத்தழகு மெய்யப்பன் & இரா அருள்ராஜ்]
வகை: கவிதை
பரிசு: யாமக்கோடங்கி [மதிக்குமார் தாயுமானவன்]
இறுதிப்பட்டியலுக்குத் தேர்வானவை:   ஒரு புத்த மதியம் [மஹேஷ் குமார்] கடல் நாகங்கள் பொன்னி [இன்பா]
வகை: புதிய அறிமுகம்
பரிசு:  காற்றலையில் [தமிழ்ச்செல்வி இராஜராஜன்]
இறுதிப்பட்டியலுக்குத் தேர்வானவை:   ஒட்டுக்கடை [கி.சுப்பிரமணியம்] ஞாபகப் பெருங்களிறு [சந்திரசேகரன் மோகனப்ரியா] முகிழ் [மலையரசி சீனிவாசன்] யாமக்கோடங்கி [மதிக்குமார் தாயுமானவன்]