இலங்கை தமிழ் இலக்கிய உலகிற்கு முதல் விதை

0
76
ஷா நவாஸ்
இலங்கை பல்கலைக்கழகத்திற்கு
 ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளையின்
 தமிழ்க்கொடை!

“சென்றிடுவீர் எட்டுத்திக்கும்;

கலைச் செல்வங்கள் யாவும்,

கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற மகாகவி பாரதியின் கனவிற்கேற்ப இங்கிருந்தும் தமிழின் செல்வங்கள் இலங்கை தேசத்திற்கு கொண்டு சேர்க்கும் பணியை ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை தொடங்கி இருக்கிறது.

இலங்கை  தென் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தில்

ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளையின்

கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஆய்விருக்கை

அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது.

அறக்கட்டளை மேற்கொள்ளவிருக்கும் பணிகள்:

▸பேராசிரியர் கா.சிவத்தம்பி வாழ்நாள் விருது:

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஆய்வாளர்களை அங்கீகரித்து, பேராசிரியர் கா.சிவத்தம்பி பெயரில் ஆண்டுதோறும் வாழ்நாள்  சாதனையாளர் விருது வழங்குதல்.

 ▸ கவிக்கோ அப்துல் ரஹ்மான் விருது:

தமிழ் இலக்கியம், கவிதை, சொற்பொழிவு மற்றும் தமிழ் இஸ்லாமிய இலக்கியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் படைப்பாளர்களை கௌரவிக்கும் வகையில், கவிக்கோ அப்துல் ரஹ்மான்  பெயரில் ஆண்டுதோறும் கவிக்கோ விருது

▸ உதவித்தொகை:

இலங்கைக்கான தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்புகள், குறிப்பாக இஸ்லாம் மற்றும் தமிழ் மொழி ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு வருடாந்திர புலமைப்பரிசில் வழங்குதல்.

 ▸ ஓவைசி விரிவுரைத் தொடர்:

உலகெங்கிலும் இருந்து முக்கிய பேச்சாளர்களை வரவழைத்து ஆண்டுக்கு ஒருமுறை தொடர் சொற்பொழிவு நிகழ்த்துதல்

 ▸ மாநாடுகள்:

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியக் கூறுகளுடன் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் புதிய வளர்ச்சிகள் குறித்து தேசிய அல்லது சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்தல்.

குறித்த அட்டவணை ஏற்றுக் கொள்ளப்பட்டது .

▸           Haji M.A .Musthafa

       Rahmath Musthafa foundation

▸    முனைவர் UL .Abdul Majeed

       Acting Vice chancellor

      South Eastern university of SriLanka

முன்னிலையில் உலக அறிவிப்பாளர் ஹாஜி B .H .Abdul Hameed  மற்றும் பல்கலைக் கழக இலங்கை பேராளர்கள் கலந்து கொண்டனர்.