தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய அறங்காவலர் குழு

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய அறங்காவலராக “சிராங்கூன் டைம்ஸ்” நிறுவனர் திரு. முஸ்தபா அவர்கள் நியமணம்.

“தமிழ் வளர்ச்சிக் கழகம்” 1946ஆம் ஆண்டு சென்னை மாகான கல்வி அமைச்சர்

தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களின் முயற்சியால் அமைக்கப்பட்ட அமைப்பாகும்.

தமிழ் மொழியில் கலைக் களஞ்சியம் தயாரித்து வெளியிடுதல், ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இலக்கிய விழாக்கள் நடத்துதல் மற்றும் தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு ரொக்கப்பரிசும் பாராட்டுப் பத்திரமும் வழங்கி தமிழ் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்தல் போன்ற தமிழியக்கப் பணிகளை முன்னெடுத்து செயல்பட்டு வருகிறது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தரும், “கணையாழி” இலக்கிய இதழின் ஆசிரியருமான தமிழறிஞர் ம.ராசேந்திரன் அவர்கள் தலைவராக செயல்பட்டு வருகின்றார்.

மறைந்த தமிழறிஞர் பெரியசாமிதூரன், சி.சுப்ரமணியம், வ.செ.குழந்தைசாமி, பொன்னவைக்கோ போன்றவர்கள் தமிழ்ப்பணி ஆற்றிய அமைப்பின் அறங்காலவராக தமிழ் இலக்கிய உலகிற்கு பல கொடைகளால் பங்களிப்பு செய்துகொண்டிருக்கும் திரு.முஸ்தபா அவர்கள் அறங்காவலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திரு.முஸ்தபா அவர்களின் தமிழ்ப்பணித் தொடர “சிராங்கூன் டைம்ஸ்” தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய அறங்காவலர் குழு:

1. திரு. ப. சிதம்பரம் (முன்னாள் ஒன்றிய அமைச்சர்)

2. முனைவர் ம.இராசேந்திரன்

3. திரு. கிருஷ்ண சந்த் கோடியா

4. பேரா. முனைவர் வ. ஜெயதேவன்

5. திரு. முஸ்தபா

6. திரு. நல்லி குப்புசாமி

7. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

8. பேரா. முனைவர் சாரதா நம்பியாரூரன்

9. திருமதி. நாகலட்சுமி குமாரசாமி

தமிழ் வளர்ச்சிக்  கழகத்தின் சீரிய பணிகள்:

இந்திய மொழிகளிலேயே தமிழுக்கு முதல் கலைக்களஞ்சியம் உருவாக்கிய அமைப்பு         (10 தொகுதிகள் )

◥  குழந்தைகள் கலைக்களஞ்சியம்

◥  மருத்துவக் கலைக்களஞ்சியம்

◥  சித்த மருத்துவ கலைக்களஞ்சியம் (ஆங்கில மொழியாக்கத்துடன் )

◥  அறிவியல் தொழில் நுட்பக் களஞ்சியம்

போன்ற அறிய கலைக்களஞ்சிய தொகுப்புகளையும் இவ்வமைப்பே வெளியிட்டுள்ளது.