
ஆங்கிலத்தில்: ஆரவ் (தொடக்கநிலை 5) தமிழாக்கம்: சவிதா
அக்ரோகாந்தோஸாரஸும் அதன் குழந்தையும்.. இன்று, அந்த தாய் அக்ரோகாந்தோசாரஸ் தனது குட்டிக்கு வேட்டையாடும் முறைகளை கற்றுக்கொடுக்கத் தயாராகிராள். சதுப்பு நிலத்தில் உணவைக்கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. ஆனால் அங்கே நீர்மறை நிலத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் பெரும் செடித்தின்னிகளைச் சமாளிப்பதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. மூன்று வேட்டைக்காரர்களும் ஒரு புற்கற்றிற்குப் பின்னால் மறைந்திருந்தனர். சிவப்பு-கருப்பு வண்ணங்களில் எதிர்வண்ண வடிவமைப்புகளாக அவர்கள் உடலின் மேலிருந்த கீற்றுகள் அவர்களைப் புல்லுக்குள் மறைவாகவே வைத்திருந்தன.
அருகே ஒரு ஔரனோஸாரஸ் கும்பல். என்ன நடக்கப்போகிறது என்பதைக் கூடத் தெரியாமல், ஔரனோஸாரஸ் ஏரியின் விளிம்பில் இருந்த பூச்செடிகளை மகிழ்ச்சியாக மென்று கொண்டிருந்தன. அவர்களது பெரிய மஞ்சள்-நீலச் செதில்கள் அவர்களை எளிதில் அடையாளம் காணச் செய்தன.
ஆக்ரோகாந்தோசாரஸ் மெல்ல மிக அருகிலுள்ள ஔரனோஸாரஸை நோக்கி நகர்ந்தது. அனுபவமற்ற ஒரு இளம் ஆக்ரோகாந்தோசாரஸ் ஒரு கிளையை முறித்தது. அனைத்து ஔரனோஸாரஸ்களும் தங்கள் தலையை உயர்த்தி சுற்றிலும் நோக்கின. அவைகளால் காண முடியாவிட்டாலும், ஆக்ரோகாந்தோசாரஸின் வாசனையை முகர்ந்து கொண்டன, கொண்டன. அதனால், அவை எச்சரிக்கையாகி விட்டிருந்தன. அவை மீண்டும் உண்ணுவதற்கு ஏதுவாகத் தலையைத் திருப்பியதும், அதனை ஆக்ரோகாந்தோசாரஸ் தாக்கத்திற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.
ஒரு இளம் ஆக்ரோகாந்தோசாரஸ் புல் கற்றைகள் வழியாக மெதுவாக வெளியே வந்தது. அதன் நடை மிகவும் மெதுவாக இருந்தது. ஔரனஸாரஸ்கள் பீதியில் கூட்டமாக ஏரி நோக்கி தப்பிக்க ஓடின. திட்டத்தின் முதல் பகுதிக்கான வெற்றி. இரண்டு ஆக்ரோகாந்தோசாரஸ்கள் அவைகளை மேலும் நீருக்குள் விரட்டின. ஔரனஸாரஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீருக்குள் பாய்ந்ததால் நீர் துளிகள் மிக உயரமாக் காற்றில் தெறித்தன. இப்போது திட்டத்தின் இரண்டாம் பகுதிக்கான நேரம். இளம் ஆக்ரோகாந்தோசாரஸ் நீர்கரையோரத்தில் நின்றது. ஔரனஸாரஸ்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. எதிர்பாராத விதமாக, பெரிய ஆக்ரோகாந்தோசாரஸ் மரங்களுக்குப் பின்வழி வெளிச்சத்திலிருந்து பாய்ந்தது. இது ஒரு திடீர் தாக்குதல்.
ஔரனஸாரஸ்கள் இதை எதிர்பார்க்காததால் அதற்குத் தயாராய் இருக்கவில்லை. தப்பிக்க முயன்றன, ஆனால் பெரிய ஆக்ரோகாந்தோசாரஸ்கள் பின்னேயும், சிறியவை நீரிலிருந்தும் முன்னேயுமாக நின்று தாக்கத் தயாராக இருந்தன. சிக்கி விட்ட ஔரனஸாரஸ்கள் ஒன்று கூடி புதிய வடிவத்தில் நின்றன. வட்டமாக நின்றுகொண்டு, எல்லோரும் தலையை மட்டும் வெளியே நீட்டின. ஆக்ரோகாந்தோசாரஸ்கள் முதலில் புத்திசாலிகள் போல இருந்தாலும், இப்போது குழப்பமடைந்தன. தாக்க ஆளே இல்லாததால், அவர்கள் எளிதாகக் கிடைக்கும் வேறு இரையைத் தேடி காட்டுக்குள் பின்வாங்கினர். இது வழக்கமாக நடப்பது தான். எல்லா ஆக்ரோகாந்தோசாரஸ் தாக்குதல்களிலும் 30% சதவீதம் தக்குதல்கள் மட்டுமே வெற்றிகரமாக முடிவடையும். இந்த பாதுகாப்பான இடம் செடித்தின்னிகளுக்கான சொர்க்கமாக இருந்தாலும், வேட்டைக்காரர்களுக்குப் பெரிய வேதனையாகவே இருந்தது.


