(கவிதை) தாயென்னும் செல்வங்கள்

(கவிதை) தாயென்னும் செல்வங்கள்

செ.ப.பன்னீர்செல்வம்

தாய்ப்பறவை இரை தேடி வரும் வரையில்

சேய்க ளெல்லாம் இசைக்கூவிக் காத்திருக்கும்

தாயவளும் வந்தவுடன் வாயைக் காட்டி

ஆவலுடன் அவள் ஊட்டும் உணவை உண்ணும்.

செல்கின்ற வழிகளிலே எத்தனை இன்னல்

அத்தனையும் தாண்டிதான் அன்னை செல்லும்

தன்சேய்கள் பசியாறி மகிழவேண்டும்

என்பதுவே பெருங் குறிக்கோள் தாய்க்கு என்றும்!

தாயென்னும் உயர்உறவை படைத்தான் பாரில்

மாநிலத்தைக் காக்கின்ற பெரியோன்  ஏகன்

நாம்வாழ தாம் வாழும் அன்னை தந்தை

உறவுகளை மறப் பதுவோ  எண்ணிப்பாரீர்!

pselvam@sph.com.sg