’சிராங்கூன் டைம்ஸ்’ நிறுவனர் முஸ்தபா முயற்சியில் ஆஸ்திரேலிய தெருவுக்குத் தமிழ்ப் பெயர்!
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் தெரு ஒன்றுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கவிக்கோ ஸ்டிரீட் (Kavikko Street) எனும் பெயரைக் கொண்ட அந்தத் தெரு, புகழ்பெற்ற கவிஞரான கவிக்கோ அப்துல் ரகுமானை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. அது மெல்ட்டன் (Melton) எனும் பகுதியில் உள்ள குருன்ஜங் (Kurunjang) வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்தச் செய்தி அறிந்த உலகெங்கும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.