பாத்திரத்தில் சொற்கள்
ஏதோ சில பொறிக்கப்படுகின்றன…
காத்திருப்போர் நெற்றிகளில்
வியர்வைத்துளிகள் துளிர்த்தன..
சமையல்காரருக்கு நேரமில்லை..
சாப்பிடுவோர்க்கும் நேரமில்லை…
பொறிக்கும் புகையில் சிக்கிவிட்ட
வார்த்தைகள் கொண்டு வித்தைக்காட்ட
கவிஞர் இங்கு காத்திருக்கவேண்டும்!
புகைமூட்ட திரையை
விலக்கி வைப்போம்
அழுகியதை மறைக்க
நறுமணம் சேர்த்த
அழகாய்த்துண்டுகளாக்கப்பட்ட
வார்த்தகளனைத்தையும்
கண்னில் மறைந்த பகுதியை விட்டு
கவனமாகவே எடுத்துவைப்போம்.
யாரோ சிலர் ஏதோ சிலவற்றை எடுத்துக்காட்டலாம்
அழுகிய பகுதி, பழைய காரவகை
இறக்குமதி மாவுப்பொருளில் பதுங்கியிருக்கும்
மென்மையான கிரீம்துகல்களை
நாம் ஒதுக்கிவைப்போம்..
கண்ணை மறைக்கும்
தீயத்திரைகள் நாளையும் நம்மை குருடாக்கலாம்.
வெண்ணைக்குழம்பால்
திரையிடப்பட்டுள்ள
வெங்காயம், பூண்டுகள் முதலானவை
நிசப்தமாகவே நம்மை பயமுறுத்துகின்றன..
இறப்பை நாமும்
மெதுவாக ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது!.
( விரைவில் வெளிவர இருக்கும்
கானா நாட்டு கவிஞர் ஜெரோம் மசாமக்காவின் ” சிதைந்த கூரையின் கீழ்” என்ற நூலின் கவிதை ஒன்று..
தமிழில்: மணலி அப்துல் காதர்)


