வணக்கம் சிங்கப்பூர்!

0
639

சிங்கப்பூர் 60.

சிங்கப்பூர் தன்னாட்சி பெற்று முழுமையான தனி நாடாக மலர்ந்து 60 ஆண்டுகள் முடியப் போகிறது.  அறுபது ஆண்டுகள் என்பது ஒரு பெரிய கால கட்டம். சிறு நகரம்; அதில் பெரு நகரத்துக்குரிய அடையாளங்களோடு சில இடங்கள், நகரத்தை ஒட்டிய விளிம்புப் பகுதிகள் கிராமங்களைப் போல் சிறு கூரை வீடுகள், தகர வீடுகள், எளிமையான வாழ்க்கைச் சூழல், குறைந்த வருமானம் என்று வாழ்ந்த தலைமுறையினர் இன்று மூத்தோர்களாக பழைய வாழ்க்கையின் எச்சங்களாக பழங்கதைகளை அடுத்த தலைமுறையினருக்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

இன்று ஆடம்பரப் பொருள்களிலிருந்து அழகுப் பொருள்கள் வரை வாங்க ஆர்ச்சட் சாலை செல்ல வேண்டும், சிட்டி ஹால் செல்ல வேண்டும், சிராங்கூன் செல்ல வேண்டும் என்ற நிலை மாறி எல்லா வட்டாரங்களிலும் பிரம்மாண்டமான கடைத்தொகுதிகள், தனியார் வீடுகள், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீவக வீடுகள், பேருந்து வசதிகள், வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் பெரு விரைவுப் போக்குவரத்து தொடர் வண்டி நிலையங்கள் இப்படி பல உள்கட்டமைப்பு வசதிகள் பெருகி விட்டன. 60 வருட கடின உழைப்பு, அரசியல் நிலைத்தன்மை, மக்கள் நலம் கருதி போடப்பட்டத் திட்டங்கள் சிறுவிதைகளாக நடப்பட்டவை இன்று பிரம்மாண்ட விருட்சங்களாய் நகரமெங்கும் நிழல் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

உலகில் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாட்டில் ஒன்றாக சிங்கப்பூர் இருக்கிறது. மகிழ்ச்சிக்கு அளவுகோல்கள் இல்லை. என்றாலும் தனி மனிதனாகவும் சமூகமாகவும் வாழ்கையில் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு சில காரணிகளை கண்டறிந்து அவற்றின் மூலம் மகிழ்ச்சிக்கான குறியீட்டை நிர்ணயிக்கிறார்கள். விலைவாசி ஏற்றம், வாழ்வியல் நெருக்கடிகள், வேலையின்மை, வேலையின்மை என்பதை விட விருப்பப்பட்ட வேலை  கிடைக்காத நிலை போன்ற சிற்சில முட்கள் உறுத்தியபோதும், வாழ்க்கை ரோஜா இதழ்கள் விரித்த பாதையாக கண்களுக்கும் நடக்கும் கால்களுக்கும் இதமளித்துக் கொண்டு செல்கிறது.

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கவும், வரலாறு, சமூகம், மொழி, பண்பாட்டுத் தளங்களில் காலப்பொருத்தமான விவாதங்களை முன்னெடுக்கும் படைப்புகளை வெளியிடவும் 2015 முதல் சமூக அக்கறையுடன் பங்களித்து வருகிறது.

சிங்கப்பூரில் தமிழரின் அடையாளமாக இவ்விதழ் நிலைபெற தங்கள் ஆதரவே உயிர்நாடி. இந்த விரைவுத் தகவல் குறியீட்டை வருடிச் சலுகை விலையில் சந்தா செலுத்தலாம். சந்தாதாரர்கள் இதுவரை வெளியான அனைத்து இதழ்களையும் இணையதளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம். படைப்புகளை editor@serangoontimes.com முகவரிக்கு அனுப்புங்கள். இதே முகவரிக்குத் தங்கள் மேலான கருத்துகளையும் அனுப்பலாம்.

ஆசிரியர் குழு, தி சிராங்கூன் டைம்ஸ்