மலேசியாவில், ஏப்ரல் முதல் தேதியில் இருந்து விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாக, மூத்த அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்தார். டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் (Photo Courtesy: thestar.com.my) தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தொழில்நுட்பக் கூட்டத்தின்போது இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அளித்த விளக்கத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சுகாதார அமைச்சகத்தின் மதிப்பீட்டுக்குப் பிறகு, பார்வையாளர்களை நிபந்தனையுடன் அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இருக்கும் பகுதிகளில், பத்து சதவிகித…

