போலீசாரைக் கண்டதும் வேகமாக பறந்த காரை, துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சபா மாநிலத்தில் இருக்கிறது லபுவான் தீவு. இங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மெதுவாக வந்த கார் ஒன்று போலீசாரை கண்டதும் வேகமாக பறந்தது. சந்தேகமடைந்த போலீசார், அந்த காரை விரட்டினர். ஆனால், போலீசாருக்கு சவால் விடும் வகையில் இன்னும் வேகமாகப் பறந்தது அந்த கார். அப்போது போக்குவரத்து நெரிசலான பகுதிக்குச் சென்ற…

