வயலுக்குள் புகுந்த யானையால் வாழைகள் சூறையாடப்பட்டதை அடுத்து கிராமவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் இருக்கிறது குவா முசாங் நகரம். இதன் அருகில் உள்ள கம்புங் சுபாங் பகுதியில் வயலுக்குள் புகுந்த யானை ஒன்று வாழைத் தோட்டங்களை சூறையாடியிருக்கிறது. இதனால் சுமார் 30 கிராமவாசிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதாகப் புகார் கூறியுள்ளனர். இந்த பகுதிகளில் ரப்பர் தோட்டங்கள் அதிகமாக இருக்கின்றன. இங்கு யானைகள் எப்போதும் வருவதில்லை. கடந்த வாரம் யானை ஒன்று இந்தப் பகுதியில் சுற்றித்…

