கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட போலீஸ்காரர் திடீரென உயிரிழந்து விட்டதாக பரவியை செய்தியை காவல்துறை மறுத்துள்ளது. மலேசியாவில் பைசர் -பயோன்டெக் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதைப் போடும் பணி, தொடங்கி நடந்து வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு போடப்படும் தடுப்பூசி அடுத்து பொதுமக்களுக்கும் போடப்பட இருக்கிறது. இதற்கிடையே தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், வதந்திகளும் வேகமாகப் பரவிவருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலர் உயிரிழந்ததாக செய்திகள் வந்த நிலையில், பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், அஸ்ட்ரா…