விரைவு பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர். மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள குலிமில் (Kulim) இருந்து தலைநகர் கோலாலம்பூருக்கு விரைவு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் அந்த பேருந்து பேராக் மாநிலத்தில் உள்ள மெனோரா சுரங்கப்பாதை அருகே சென்றபோது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த 14 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த…