சீனாவின் சோங் அரசவம்சம் வடக்கேயிருந்து வந்த மங்கோலியரின் தீவிரமான நெருக்கடிக்கு உள்ளானபோது, வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுக் கப்பல் வணிகம் செழித்துப்பெருகி, சீனர்கள் மலாக்கா நீரிணைப் பகுதிக்கு 13, 14ஆம் நூற்றாண்டுகளில் திரளாக வந்து நிரந்தரமாகத் தங்கினார்கள். 1331ல் தமிழகத்துக்கும் சென்ற வாங் தா யுவன் நாகப்பட்டினத்தில் சீனர் சமூகம் வாழ்ந்ததையும், மரங்களும் பாறைகளும் சூழ்ந்த இயற்கைச் சூழலில் 100 அடி உயரத்துக்கு மூன்று மாடி கொண்ட அழகிய பௌத்த ஆலயம் கட்டிக்கொண்டு அவர்கள் வழிபட்டதையும் நேரில் கண்டார்….

