தமிழர் புத்தாண்டு, சீக்கிய வைசாகி பண்டிகை, முஸ்லிம்களின் ரமலான் நோன்புத் தொடக்கம் ஆகிய விழாக்களை ஒட்டி மக்களுக்கு தன் வாழ்த்துகளை பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். படம்: பிரதமர் லீ, MCI “நமது முஸ்லிம் சமூகத்துக்கு புனித ரமலான் மாதம் ஆரம்பமாகியுள்ளது. இன்றும் நாளையும் நமது தெற்காசிய இன சமூகங்களுக்கு குறிப்பிடத்தக்க நாட்களாகும். ஏப்ரல் 13-ஆன இன்று சீக்கியர்கள் சீக்கிய நாள்காட்டியில் மிக முக்கியமான நாளான வைசாகியைக் கொண்டாடுகிறார்கள். நாளை, தமிழ் நாள்காட்டியின் முதல் நாளில்…


