மலேசியாவில் கோழிகளின் விலை திடீரென உயர்ந்தது ஏன் என்பதற்கு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி விளக்கம் அளித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் திடீரென கோழி விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், கோழித் தீவனங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ததுதான் கோழிகளின் விலை உயர்வுக்குக் காரணம் என அமைச்சர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, தனது அமைச்சகம் நாட்டின் முக்கிய கோழிப்…


