சூரியன் தன் ஆயிரம் கரங்களை நீட்டி உலகில் இருக்கும் மனிதர்களை மெல்லத் தட்டி எழுப்பத் தொடங்கினான். என்ன அருமையான ஆரம்பம்! டேனியலுக்குத் தன் கதையை இப்படித் தொடங்குவதில் எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது போல் இருந்தது. அடச்சே!வெறும் தொடக்கப்பள்ளி மட்டும் படித்த ஒருவனின் கதையா என்ற முணுமுணுப்பு கேட்கிறது.டேனியலுக்கு அற்புதமாக அமைந்த அந்த காலைப்பொழுதில் முதலில் தோட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அவா ஏற்பட்டது. பறவைகளின் கீச்சொலிகள், வண்டினங்களின் ரீங்காரம், தேன் சிந்தும் மலர்களில் உள்ள தேனீக்களின்…