தேசிய கலைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் எழுத்தாளர் விழாவில் இவ்வாண்டு சில புதுக்குரல்கள் ஒலித்தன. ‘எழுதுவதா வேண்டாமா? – இளம் எழுத்தாளரின் குழப்பம்’ என்ற தலைப்பில், சிங்கையின் சமகாலத் தமிழிலக்கியச் சூழலை சிங்கையிலேயே பிறந்து வளர்ந்த இளையர்களின் கண்ணோட்டத்திலிருந்து விவாதிக்க இவ்வமர்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காயத்ரி இளங்கோ, ஹரிணி வி, இளஞ்சேரன் குணசேகரன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டு பல கருத்துகளை முன்வைத்தோம். அமர்வை வழிநடத்தியவர் தமிழக எழுத்தாளரான திரு எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்ரா). நிகழ்வை வழிநடத்தியதோடு நாங்கள் கூறிய பல…