1910ம் ஆண்டு எழுதப்பட்ட சிங்கை ஜுஹர் பிரயாணக் கும்மி, செய்கு முகமது பாவலர் என்பவரால் இயற்றப்பட்டது. இதன் முதல் பகுதியில் (சுட்டி கட்டுரையின் இறுதியில்) தன் நண்பரும் புரவலருமான பீனாமூனாவையும் அவரது ஷாப்புக் கடையின் சிறப்புகளையும் பாவலர் பாடியதைப் பார்த்தோம். இந்தப் பகுதி 1910ம் ஆண்டு சிங்கை எப்படி இருந்தது என்ற வர்ணனையைப் பார்ப்போம். கோரிப் பாலத்தைக் கடப்பதாக சொல்லும் பாவலர், அதில் கப்பல்கள் கட்டப்பட்டிருக்கும் விதததிக் கண்டு வியக்கிறார். மூன்றரை நாழிகை நடை பயணத்தில் கடக்கக்…