இந்தியாவிடம் இருநது பத்து மில்லியன் (ஒரு கோடி) கொரோனா தடுப்பூசிகளை வாங்க, இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த வைரஸை எதிர்த்துப் போராட தடுப்பு மருந்தை பல்வேறு நாடுகள் உருவாக்கியுள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் கொரோனா முன்களப் பணியாளர்கள், சுகாதாரத் துறைப் பணியாளர்களுக்கு கடந்த வாரம் போடப்பட்டன. இந்நிலையில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு மருந்தை அவசர காலத்துக்கு…