கடந்த புதன்கிழமை துவாஸ் தொழிற்சாலை குண்டுவெடிப்பில் இறந்த தமிழ் தொழிலாளியின் குடும்பத்துக்கு நன்கொடை வழங்க 100,000 அமெரிக்க டாலர்களை திரட்டியுள்ளது, சிங்கப்பூரிலுள்ள ஆன்லைன் தொண்டு நிறுவனம். ஆன்லைன் மூலம் நிதி திரட்டும் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான கிவ் ஏசியா (Give Asia), ஒரு இடுகையில், ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்குள் 2,141 பேர் நன்கொடை அளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. 38 வயதான எஸ். மாரிமுத்து குடும்பத்துக்கு உதவ 200,000 சிங்கப்பூர் டாலர்கள் நன்கொடை என்ற இலக்கைக் காட்டும் இந்த தொண்டு…

