வேட்டைக்காரர்களால் சுடப்பட்ட மலேசியன் புலியான ‘அவாங் ரசாவ்’ உயிரிழந்துவிட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது. மலேசியாவில் தெரெங்கானு பகுதியில் ‘அவாங் ரசாவ்’ என்ற ஆண் புலி காயமடைந்திருப்பதாக, அந்த பகுதியினர் சில நாட்களுக்கு முன் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வந்த சுமார் 15 பேர் கொண்ட வனத்துறையினர், அந்தப் புலியை மீட்டு, புத்ர மலேசியா கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதுபற்றிய தகவலை வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காதிர் அபு…