மலேசியாவின் பஹாங் மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க, தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள். மலேசியாவின் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்று பஹாங் (Pahang). மலைகள், மழைக்காடுகள் மற்றும் அழகான கடற்கரைகளுக்குப் பெயர் பெற்ற இந்த மாநிலத்தில், காடுகள் அதிகம். இங்குள்ள குவாண்டன், பெகான், ரோம்பின் மாவட்டங்களில் உள்ள காடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் தீப்பிடித்தது. உள்ளூர் மக்கள் அல்லது வெப்பமான வானிலை காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என்று தீயணைப்பு மற்றும் மீட்புத்…

