ஆஸ்திரேலியா – சிங்கப்பூர் நாடுகளிடையே பயணக்குமிழி (travel bubble) ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இரு நாடுகளுக்கிடையே மக்களை தனிமைப்படுத்தப்படாமல் பயணிக்க இந்த பயணக்குமிழி அனுமதிக்கும் என்று சிங்கப்பூர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 14) உறுதிப்படுத்தியுள்ளது. தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிப்பது மற்றும் மாணவர்கள், வணிக பயணிகளுக்கு முன்னுரிமை தருவது, நாடுகளுக்கிடையேயான பயணங்களை மீண்டும் பாதுகாப்புடன் தொடங்குவது குறித்து இரு நாடுகளும் கலந்துரையாடி வருகின்றன என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் (எம்.எஃப்.ஏ) ஊடகக் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது. “இந்தப்…