அமெரிக்காவைச் சேர்ந்த பீப்பிள் (BEEPLE) என்று அறியப்படும் டிஜிட்டல் ஓவியர் மைக் விங்கெல்மேன், 2007-ம் ஆண்டு மே மாதம் முதல் தினமும் ஒரு புகைப்படத்தைச் சேகரித்து ‘எவ்ரிடேஸ்: தி ஃபர்ஸ்ட் 5,000 டேஸ்’ என்ற தலைப்பில் டிஜிட்டல் ஓவியத்தை உருவாக்கினார். இந்த ஒரு டிஜிட்டல் ஓவியத்திலேயே 5,000 படங்கள் இடம்பெற்றுள்ளன. மைக் விங்கெல்மேனின் இந்த டிஜிட்டல் ஓவியம் அண்மையில் 69 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் விற்பனையானது. 15 மில்லியன் டாலர் எனத் தொடங்கிய இந்த ஏலம்…

