கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கொரோனா நோய்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலூதின் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த, தடுப்பூசி போடும் பணியை பல்வேறு நாடுகள் தொடங்கியுள்ளன. மலேசியாவில் பைசர் -பயோன்டெக் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக இப்போது முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத்துறை மூலம் இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதற்கிடையே தடுப்பூசிகளை வாங்குவதற்கு தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட இருக்கிறது. அதன்படி…

