படம்: nlb.gov.sg மலாக்காப் பிரவேசத் திரட்டு என்ற இந்த நூல் நாகூர் கி. அப்துல்காதிறு சாகிபு மரைக்காயர் மகன் மதுரகவி வாருதி கி. அ. வு. செவத்தமரைக்காயர் இயற்றி, 1886ம் ஆண்டு புறையாறு குலாமுகய்யிதீன் சாகிபு மகன் சிங்கப்பூர் மகுதூம் சாகிபுக்கு சொந்தமான தீனோதயவேந்திரசாலை அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இந்த பொறையாறு மகுதூம் சாகிபு அவர்கள்தான் சிங்கையின் மிகப் பழமையான தமிழ் இதழான சிங்கை நேசனை பதிப்பித்தவர். படம்: roots.gov.sg செவத்தமரைக்காயர் எழுதிய மும்மணிக் கோவை, உயிர் வருக்கக்…