குடியரசுத் தலைவர் ஹலிமா யாக்கோப் டிஜிட்டல் தீர்வுகள் உருவாக்கும் பொறியியல் நிறுவனமான ஸ்ட்ரக்டோ நிறுவனத்தை நேரில் பார்வையிட்டதைக் குறித்து செய்தி வெளியிட்டிருக்கிறார். ஹலிமா யாக்கோப் “பல் தொழிலுக்கு (dentistry) டிஜிட்டல் சேர்க்கை உற்பத்தி தீர்வுகளை உருவாக்கும் சிங்கப்பூர் மேம்பட்ட உற்பத்தி மற்றும் பொறியியல் நிறுவனமான ஸ்ட்ரக்டோவை இன்று பார்வையிட்டதில் எனக்கு மகிழ்ச்சி. அதன் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு, எண்டர்பிரைஸ் சிங்கப்பூரின் ‘சீட்ஸ்’ மூலதனம் உதவியது. இது தொழில்நுட்ப பங்காளிகளை சாத்தியமான முதலீட்டாளர்களுடன் இணைத்தது. சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும்…