கோலாலம்பூரில் பெய்த கடும் மழை காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அவ்வப்போது மழை பெய்வது வழக்கம். செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சில மணி நேரம் பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடானது. கடும் மழை காரணமாக, மஸ்ஜித் ஜமேக் அருகே கட்டிடம் ஒன்றின் கண்ணாடி சுவர் இடிந்து விழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்…

