
மலேசியர்கள் தோட்டத்துறைகளில் வேலைகளை மேற்கொண்டு லாபகரமான வருமானத்தை பெறலாம் என்று தோட்டத் தொழில்கள் துறை அமைச்சர் டத்தோ முகமது கைருதின் அமான் ரஸாலி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, பெரும்பாலானவர்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதில்லை என்றும், அவர்கள் தோட்டத்தொழிலை 3டி என்று வகைப்படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார். அழுக்கானது, கடினமானது, ஆபத்தானது (“3Ds” or dirty, difficult and dangerous.) என்பதுதான் அந்த 3D என்றார்.