இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் மலேசியாவிற்குள் நுழைவதைத் தடுக்கும் முடிவு பாரபட்சமானது அல்ல என்று மலேசிய பிரதமர் டான் ஶ்ரீ முகைதின் யாசின் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து இந்திய விமானங்கள் மலேசியாவுக்குள் நுழைய தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) முதல் இந்தத் தடை விதிக்கப்படுவதாக, மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தத்…