சிங்கப்பூரில் உள்ள வீடுகளில் அதிகம் பேசப்படும் மொழியாக ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
அண்மையில் வெளியிடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புத் தகவல்களின்படி, 2020-ம் ஆண்டில் பெரும்பாலான குடியிருப்பாளர்களின் வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மொழி ஆங்கிலம் என்பது தெரிய வருகிறது. இம்மொழிப் பழக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்றில் ஒரு பங்கு குடியிருப்பாளர்களிடமே இருந்தது. இதில் இனக்குழு வேறுபாடு எதுவும் இல்லை. அனைத்து பெரிய இனக்குழுக்களிலும் ஆங்கிலத்தின் பயன்பாடு அதிகம் காணப்படுகிறது. மாண்டரின், சீன பேச்சுவழக்குகள், மலாய் மற்றும் தமிழ் ஆகியவற்றின் பயன்பாடு பெருமளவில் குறைந்துள்ளது.