“அடையாளத்திற்காக, சிங்கப்பூரியன் என்றுதான் குறிப்பிடுவேன்… ஆனால், என் உள்ளத்தில் எல்லாப் பிரதேசமும் எம்முடையதுதான். இனம், மதம், மொழி பாராது எல்லா மனிதர்களும் என் உறவினர்கள்தாம் எனும் உணர்வு தலைதூக்கி நிற்கிறது…” என்று கூறும் நாயகியின் இந்தப் பதில் இந்தப் புனைவின் அடிநாதமாக, படைப்பை உயர்த்திப் பிடித்து, நாவலின் இலக்கை அடைந்து விடுகிறது.