அந்நியமாகும் நான்… இரத்தநாள மறதிநோயும் அதைப் பற்றிய விழிப்புணர்வும் – சர்மிலி செல்வராஜி

0
145

நமக்கு அடையாளம் கொடுத்தவர்களே நம்மை அந்நியர்களாகப் பார்க்கும்பொழுது, அந்த வலி வர்ணனைக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொரு 3 வினாடியும் ஒரு புதிய நபருக்கு ‘டிமென்ஷியா’ (dementia) எனப்படும் மறதிநோய் இருப்பதாக உறுதிசெய்யப்படுகின்றது. இம்மறதிநோய் உலகளவில், 2017-ன் படி, 50 மில்லியன் பேரைப் பாதித்துள்ளது. இன்னும்
20-30 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3 மடங்குவரை அதிகரிக்கக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

மறதிநோய் ஒரு சுகாதாரப் பிரச்சனை மட்டும் கிடையாது. அதனைச் சார்ந்த மருத்துவ செலவுகள், நோயாளிகளைப் பார்த்துகொள்ளும் செலவுகள் எனப் பொருளாதார அளவிலும் அது சுமை தருகின்றது. இதனை முன்னிட்டு, 2012-ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் மறதிநோய்க்குப் பொது சுகாதார முன்னுரிமை (World Health Priority) வழங்கியது.
சிங்கப்பூரில், 2018-ஆம் ஆண்டு கணிப்புகள்படி 82,000 பேருக்கு மறதிநோய் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பலரைத் தாக்கவுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், நமது மூப்படையும் சமுதாயம். மூப்படைதல், மறதிநோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணி. 65 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே மறதிநோய் மிகப் பரவலாகக்காணப்படுகின்றது. எனவே, சிங்கப்பூரைப் போன்ற வேகமாக மூப்படைந்து வரும் நாடுகளில் மறதிநோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். சொல்லப்போனால், ஆசியக் கண்டம் உலகத்தில் உள்ள மூத்த குடிமக்களில் சரிபாதியைக்கொண்ட கண்டமாக விரைவில் ஆகவுள்ளது. எனவே, வயதாவதால் ஏற்படக்கூடிய நோய்களில் பெரும் பங்கு வகுக்கக்கூடிய மறதிநோயின் அச்சமும் படர்கிறது.

This content is for paid members only.
Login Join Now