சதாகாலமும் கடல் சத்தமிட்டுக் கொண்டேயிருக்கிறது. அதன் அலைகள் ஓய்வு இல்லாமல் தன் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஜொகூர் எல்லையைக் கடந்து போகையில் நான் பார்த்த கடலுக்கும் சிங்கப்பூருக்கும் எப்பொழுதும் தார்மிகமான குறியீட்டுத் தொடர்பு இருப்பதாகவே உணர்கிறேன். 2008-ம் ஆண்டு ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ நிகழ்ச்சிக்காக நண்பர் நீதிபாண்டியன் மூலம் சிங்கப்பூர் சென்றிருந்தேன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மின்னஞ்சல் வழி தான் சிங்கப்பூர் வரவிருப்பதைத் தெரிவித்த அடுத்த கணமே நானும் செல்வதாக முடிவெடுத்தேன்.