மிஸஸ் ராஜாமணி, மிஸஸ் டேவிட் வீட்டிற்கு எதிர் புளோக்கில்தான் இருக்கிறாள். மிஸஸ் டேவிட் வீட்டிற்கு யார் வந்தாலும் முதலில் அவர்கள் படுவது அவள் கண்ணில்தான். ‘க்ளோசுடு சர்க்யூட் கேமரா’ ஏதும் வீட்டு வாசலில் வைத்திருக்கிறாளோ என்ற சந்தேகம் உங்களுக்கு வருவது போன்றே டேவிட்டுக்கும் பலமுறை வந்திருக்கிறது. எதிர் புளோக்கிலிருந்து பார்க்கும்போது இவரது வீட்டுவாசல் ஏதும் தெரியாதவாறு தொட்டிச்செடிகளையும் வளர வைத்துப்பார்த்தார் இவர்; ஆனாலும் என்ன பயன்?