தி சிராங்கூன் டைம்ஸ் அக்டோபர் இதழ் மொழிபெயர்ப்பு சிறப்பிதழாக மலர்கிறது. இந்த இதழில் வெளியாகும் முக்கியக் கட்டுரைகள் பற்றிய அறிமுகம் இது. பாலா அரை நூற்றாண்டுக் கால மொழிபெயர்ப்பு பயணம்! பாலா என்று நண்பர்களிடையே அறியப்படும் ஆ.பழனியப்பன் சிங்கப்பூரில் நன்கு அறியப்பட்ட மொழிபெயர்ப்பாளர். புக்கிட் மேரா தொடக்கப்பள்ளியிலும், பிறகு இராஃபிள்ஸ் பள்ளியிலும் பயின்றவர். குடும்பத்தின் மூத்த ஆண் பிள்ளை. பள்ளிப் படிப்பை முடித்ததும், குடும்பச் சூழல் காரணமாக 1968ல் உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது….