மகிழ்ச்சி, ஆனந்தம், சந்தோஷம், பரவசம், குதூகலம் – இவைதாமே பண்டிகைகளின் தாரக மந்திரம். கொண்டாட்டமே ஒரு வழிபாட்டு முறையாகத் திகழும் தீபாவளித் திருநாள் சிராங்கூன் சாலையில் களைகட்டி நிற்கிறது.
பொங்கல், தீபத் திருவிழா ஹரி ராயா கொண்டாட்ட நாட்களில் சீனர்கள் இந்தியர்களைப் பார்க்கும்போது இது யார், எந்த மதத்தவர் என்று வேறுபாடு தெரியாமல் “ஹேப்பி நியூ இயர்” என்று சொல்லுவார்கள்.
தீபாவளித் திருநாள் சந்தையிலும் என்னையும் பாரதியையும் பார்த்து ஒரு சீனர் “ஹேப்பி நியூ இயர்” என்றார். பண்டிகைகள் மனிதம் வளர்க்கின்றன.