சிங்கப்பூர் இலக்கிய வெளியீடுகள்

பொன் மனமிருந்தால் புவி வசமாகும் (பாகம் 2), யூசுப் ராவுத்தர் ரஜித், சொந்த வெளியீடு, 2022 புத்தகம் வாங்க ஆசிரியரைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 90016400
ஐந்து வயதில் சிங்கப்பூர் வந்து பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து, பல தொழில்களைச் செய்து, தன் தாய்தந்தையரைப் பராமரித்து, சகோதர, சகோதரிகளின் திருமணத்தைதயும் தானே முடித்துவைத்து, பல தரும காரியங்களை முன்னின்று நடத்தி, சிங்கப்பூரிலுள்ள பல தமிழ் அமைப்புகளின் வளர்ச்சிக்கு தன்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்து வாழும் ஒரு மனிதரைப் பற்றிய கதை இது.
பிப்ரவரி 2022 இதழில், அதற்கு முந்தைய ஆறுமாதங்களில் வெளியான, 13 சிங்கப்பூர்ப் புனைவு, கவிதை நூல்களின் அறிமுகங்களை தி சிராங்கூன் டைம்ஸ் வெளியிட்டிருந்தது. இம்முறை படைப்பூக்க அபுனைவு (creative non-fiction) நூல்களும் இப்பகுதியில் இடம்பெறுகின்றன. கடந்த இதழில் 2022-2023 காலகட்டத்தில் வெளியான 9 நூல்களின் அறிமுகங்கள் இடம்பெற்றன.
அறிமுகம் வெளியிட விரும்புவோர் அச்சில் வெளியான நூல்களின் (கவிதை, புனைவு, படைப்பூக்க அபுனைவு) நூல்குறிப்பை (30 சொற்களுக்கு மிகாமல்) பெயர், ஆசிரியர் பெயர், வெளியான ஆண்டு, பதிப்பாளர் விவரம், நூலின் முன்னட்டைப்படம், சிங்கப்பூரில் கிடைக்குமிடம், தொடர்பு எண் ஆகியவற்றுடன் அனுப்பலாம்.
அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: [email protected]