மேற்கோள்கள்

சுபாஷினி கலைக்கண்ணன்

ஃப்ராங்க் காஃப்கா (Frank Kafka) இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவர். இவருடைய மேற்கோள்கள் பிரபலமானவை. அவற்றில் சில தமிழில்:

A book must be the axe for the frozen sea within us.

ஒரு நூலாவது, நம்முள் உறைந்து கிடைக்கும் கடலை தகர்க்கும் கோடாரியாக வேண்டும்.

Many a book is like a key to unknown chambers within the castle of one’s own self.

பல நூல்கள் நம்முள்ளிருக்கும் மாளிகையின் அறியப்படாத அந்தபுரங்களைத் திறக்கும் திறவுகோல்.

Don’t bend; don’t water it down; don’t try to make it logical; don’t edit your own soul according to the fashion. Rather, follow your most intense obsessions mercilessly.

வளைந்து போகாதே; கலப்படம் செய்யாதே; அதை அறிவுப்பூர்வமாக மாற்ற முயலாதே; உன் ஆன்மாவை இதற்கேற்றபடி திருத்தி எழுதாதே. மாறாக உன் மனதின் உள்ளோட்டத்தை இறக்கமேயில்லாமல் பின்தொடர்ந்து செல்.

I am a cage, in search of a bird.

ஒரு பறவையைத் தேடும் கூண்டு நான்

I am free and that is why I am lost.

நான் மிகவும் சுதந்திரமாக இருப்பதினால்தான் தொலைந்துபோகிறேன்.

I write differently from what I speak, I speak differently from what I think, I think differently from the way I ought to think, and so it all proceeds into deepest darkness.

நான் கூறுவதை எழுதுவதில்லை, நான் எழுதுவதை மாறுபடுத்தி உரைக்கிறேன், நான் சிந்திக்கவேண்டியதை விடுத்தது வேறுபடுத்தி சிந்திக்கிறேன், ஆகையால் தான் அனைத்துமே அடர்ந்த இருட்டிற்குள் இட்டுச்செல்கின்றது.