
மன ஊஞ்சலின்
பலகையில் அமர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறது
யாரோ பறக்கவிட்டுப் போன
பட்டாம்பூச்சி
மறந்துபோன உன் நினைவுகளை
கிள்ளி உயிர்ப்பிக்கிறது
காற்றில் பரவும் அகிற்புகை வாசனை
மேகத்தின் சாம்பலெனப் படிகிறது
கூதிர்கால யாமத்தின் இருட்டு என் மீது
பட்டுப் பட்டு மரத்துப்போன
தழும்புகளின் மேடுகளில் ஊறுகிறது
அரவம் அமைதியாய்
யாருமறியாது தீண்டிய விடத்தின் மிச்சம்
உதட்டு விளிம்பில்
கண்கூச ஒளிர்கிறது
நீ சொன்ன ஒவ்வொரு பொய்யிலும்
தவழ்கிறது
சாமார்த்தியத்தின் ஆன்மா வெட்கமின்றி.
raf_ash@hotmail.com


