(நூல் வெளியீடு) புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வைப் பேசும் – நீராம்பல்

கங்கா பாஸ்கரன்

காதல், பெண்ணியம் மற்றும் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளைக் கவிதைக்குள் எவ்வாறு கையாள முடியும், புலம் பெயர்ந்தவர்களின் வாழ்வியல் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது.  அதன் யதார்த்தத்தை அதன் வீரியத்தை கவிதைகள் எவ்வாறு பேசி இருக்கின்றன என்ற ஒரு புதிய நுட்பமான கோனத்தோடு கவிஞர் சேரன் அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்ட சிங்கப்பூர் கவிஞர் கங்கா பாஸ்கரனின் நீராம்பல் கவிதை நூலை முன்வைத்து நிகழ்த்திய உரையாடல் மிகவும் கவனத்திற்கு உரியது.

இந்த நூலில் வெளிவந்த சில கவிதைகள் சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் நடத்தும் தங்க முனை விருது 2023க்காக தேர்தெடுக்கப்பட்டவை என்பதனால் இத்தொகுப்பில் உள்ள “ஒரு குவளை தேநீர், வெறுமையாகும் தேநீர், கைவிடப்பட்ட தேநீர், தேநீரும் மையலும் போன்ற கவிதைகள் புத்தகத்தின் தோற்றத்தை அழகுப்படுத்தின”.

சென்னை கவிக்கோ மன்றத்தில் நடந்த வெளியீட்டு விழாவில் பங்கேற்றவர்கள் சிங்கப்பூர் கவிஞர் புதுமைத்தேனி மா.அன்பழகன், கவிஞர் ஹேமா, மண்குதிரை, கவிஞர் சேரன் (கனடா), கவிஞர் வெயில், இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார்