(கவிதை) பச்சை பூத்தவை

டாட்டூவின் கிட்டாரை

ஒரு பெண் ஒருபக்க மார்பில் சாய்த்து வைத்திருக்கிறாள்

அடுத்த நிறுத்தம்வரை

இசையில் மூழ்கியிருக்கலாம்

இரண்டாவது இருக்கையில்

ஒரு காதுமடலின் ஓரத்தில்

கேசமறைவில்

இரு பூக்கள் உதிர்ந்து கிடக்கின்றன.

இதோ..

பின் கழுத்தோடு ஒரு வண்ணத்துப்பூச்சி

என்னை விலக்கி முன் செல்கிறது

சுருக்கங்கள் நிறைந்த

பூதவுடல்களில் இருந்த பெயர்கள்

மாண்டவர் நேசத்திற்குப்பின்

பறவைகளாக வாழ்கின்றன

நிலாகண்ணன்

nilakanna1983@gmail.com