
பிறந்தநாளைக் கொண்டாடுங்கள்
ஆனால் மறக்காதீர்கள்
பசியுடன் பக்கத்தில் நிற்கும் ஒருவனையும்.
அவனைத் தவிர்த்துவிடாதீர்கள்
அவனுக்காகவும்
இரு துண்டுக் கேக்கை வெட்டி வையுங்கள்
நீங்கள் பரிசளித்த கேக்கை
அவன் விழுங்கும்போது
வாய்மொழியாக இல்லையென்றாலும்
புன்னகையால் வாழ்த்தக்கூடும்
அவனது கண்களைப் பாருங்கள்
உங்கள் வாழ்நாளில்
கண்டிராத பார்வை அது
இனி நீங்கள் விரும்பி
மற்றவர்களின் பிறந்தநாளையும்
கொண்டாடச் செய்வீர்கள்
அங்கு கொடுக்கப்படவிருக்கும்
இரண்டு கேக் துண்டுகளுக்காக.


