கவிதை – கவிஞர் வாலிஸ்வரன்கவிதை –

0
444

சாயல்

பெருநகர வீதிகளை

நள்ளிரவு மெதுவாக விழுங்கி

கொண்டிருந்தது.

நடைமேடையில்

குழந்தையுடன் உறங்குபவளுக்கு

யசோதரையின் சாயல்.

போதையில் தள்ளாடும்

நண்பனை தாங்கி பிடிப்பவனுக்கு

கர்ணனின் சாயல்.

வயிற்றுக்காக குழலூதி

பிழைக்கும் கண்ணிழந்தவனுக்கு

கண்ணனின் சாயல்.

கேளிக்கை விடுதியில்

தோழிக்கு ஆறுதல் சொல்பவனுக்கு

ராமனின் சாயல்.

மனைவியை தவிக்கவிட்டு

தன்னை தேடி அலைபவனுக்கு

புத்தனின் சாயல்

இத்தனை

சாயலை கானும் கண்களுக்கு

யாருடைய சாயல்?

கவிஞர் வாலிஸ்வரன்

valeeswaran.k@gmail.com