டைனசார்களின் உள்நிகழ்வுகள் – 5 ஆங்கிலத்தில்: ஆரவ் தமிழாக்கம்: சவிதா

0
553

(இளையர் பக்கம்)  டைனசார்களின் உள்நிகழ்வுகள் – 5

ஆங்கிலத்தில்: ஆரவ் (தொடக்கநிலை 5)  தமிழாக்கம்: சவிதா

பறவைகளின் முன்னோடி- ஆர்கியோப்டெரிக்ஸ்

இத்தொடர் பல்வேறு புவியியல் சூழல்களில் வாழ்ந்த டைனோசர்களின் வாழ்க்கையை ஒரு சிறிய கண்ணோட்டத்தில் காட்டுகிறது. கடந்த வாரங்களில், கடல் கரைகள், ஏரிகள், பனியால் மூடப்பட்ட பகுதிகள், பாலைவனங்கள், புல்வெளிப் பகுதிகள் ஆகிய இடங்களில் வாழ்ந்த டைனோசர்களை பார்த்தோம். அடுத்து, சதுப்பு நிலத்தில் வாழ்ந்த டைனோசர்களின் வாழ்க்கையைப் பார்க்கலாமா?

சதுப்புநிலக் காடுகள் உணவு நிறைந்த இடங்களாக இருந்ததால், இந்நிலப்பரப்பு பல வண்ண இறகுகளுடன் தங்கள் அழகை வெளிப்படுத்த விரும்பிய டைனோசர்களுக்கு அற்புதமான இடமாக அமைந்தது.

வரிக்குதிரையின் பட்டையைப் போன்ற வரிகளைக் கொண்ட ஒரு பறவை தன் காட்சி அரங்கில் நின்றிருந்தது. அதன் மேடையில் விழுந்திருந்த சிதறிய இலைகளை அது மிக நேர்த்தியாக ஒதுக்கித் தூர வைத்தது. இது ஆர்கியோப்டெரிக்ஸ், டைனோசர்களுக்கும் பறவைகளுக்கும் இடையிலான ஒரு பண்டைய இணைப்பு. ஆர்கியோப்டெரிக்ஸ் ஆண்கள் தங்களைக் காட்சிபடுத்தும் காலங்களில் தங்கள் உயிரையே பணயமாக வைத்து விடும். தரையில் இருக்கும்போது அவை பாம்புகள் போன்ற பேரினப்பிராணிகளுக்கு எளிதான இரையாகி விடும். மிக வலுவானவதே பிழைத்திருக்கும்.

அந்தப் பகுதியில் வசிக்கும் ஆர்கியோப்டெரிக்ஸ் புதருக்குள் ஒரு மின்னல் போன்ற ஒளிச்சாயலைக் கண்டது. அது ஒரு பெண். அதே நேரத்தில், மேலிருந்து ஒரு கூச்சல் கேட்டது. மற்றொரு ஆண். அவனுடைய அழகையும் திறனையும் காட்சிபடுத்தும் நிகழ்வு அவன் நினைத்த அளவுக்கு எளிதாக இருக்காது. அந்த ஆர்கியோப்டெரிக்ஸ் பாய்ந்து மேலே சென்று, ஒரு வருத்தமான இசைநடை கீச்சுக்களின் தொடரை வெளிப்படுத்தியது. பின்னர் அது தன் எதிராளியை வணங்கி, தன் இறகுகளைத் தன் முழு மகிமையுடன் விரித்துக் காட்டியது. அதன் பிறகு அவர்கள் இருவரும் மோதினர். பார்வையாளர்கள் மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்த ஆர்கியோப்டெரிக்ஸ் கடுமையாகப் போராடினான். அவர்கள் இருவரும் இறகுகளை அடித்து, கீறி, கோபமாகப் போரிட்டனர். இறுதியில், அங்குக் குடியிருந்த ஆர்கியோப்டெரிக்ஸ் தன் எதிராளியைத் தன் மேடையிலிருந்து விரட்டினான். இப்போது அவன் போரிட்டதன் விளைவாகத் தாகமாக இருந்தான். தன்னுடைய பெண்ணைப் புறக்கணித்து, தன் இறகுகளை விரைவாக அடித்து, மரச்சூடையின் உயரத்தில் பறந்து தண்ணீரைத் தேடினான். கைஹொங் என்பதைக் காட்டிலும் சிறந்த பறக்கும் திறனுடையவனாகத் திகழ்ந்த அவன், தன்னகத்தே “விஷ் போன்” கொண்டிருந்ததால் அருமையாகப் பறந்தான்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒரு பேரினப் பிராணியான ராம்ஃபொரின்கஸ் வானிலிருந்து பாய்ந்து வந்து, தனது பற்களுள்ள தாடையால் அவனைப் பிடித்தது. பறக்கும் திறன் கொண்ட முதல் பறவையாக ஆர்கியோப்டெரிக்ஸ் இருந்தாலும், அக்காலத்தில் அது வானின் ராஜாவாக இருக்கவில்லை. ஊர்ந்து செல்லும் பிராணிகள் (reptiles) அவற்றைவிடத் திறனுடன் விளங்கின. இருப்பினும், அவை அந்த ஊர்ந்து செல்லும் பிராணிகளின் ஆட்சியில உயிர் பிழைத்து இருந்தன. அவை உண்மையான பிழைப்பாளிகளாக விளங்கி, பறவைகளின் பரிணாம வளர்ச்சிக்குத் தூண்டுகோலாயின.