
முனைவர் இராமநாதன்
சிங்கப்பூர் எனும் நவீன நகர நாடு, சிறிய நிலப்பரப்புடன் தொடங்கி, உலகளாவிய பொருளாதார மையமாக மாறியது ஒரு சிறப்பான சாதனை. அதன் வளர்ச்சியின் முதன்மைக் காரணிகளில் ஒன்று அதன் மனிதவள மூலதனம், குறிப்பாக இளைய தலைமுறையின் தன்னிறைவு, திறமை மற்றும் பங்களிப்பு ஆகியவையாகும். உலகத் தரத்தில் முன்னேறிய ஒரு நகர நாடான சிங்கப்பூர், கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக நீதியில் நிலையான வளர்ச்சியைக் காணும் நாடாகவும் உருவெடுத்துள்ளது. கல்வியில் முதலிடம், தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், சமூக நலத்தில் அக்கறையுள்ள பங்கேற்பு, அரசியல் விழிப்புணர்வில் ஈடுபாடு எனப் பல்வேறு தளங்களில் இளையோர் வெற்றிகரமாக முன்னேற இங்கு வாய்ப்புகள் நன்றாக உருவாகியுள்ளன.
இவ்வாறு வளர்ச்சியடைந்த ஒரு நவீனச் சமூகத்தில், இன்றைய இளைய தலைமுறைக்காகத் திறந்திருக்கின்ற வெற்றி வாய்ப்புகள் எண்ணற்றவை. இவை, அவர்கள் திறமை, முயற்சி மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வாய்ப்புகளாகவும், அவர்களின் வாழ்க்கையை மாற்றும் அம்சங்களாகவும் திகழ்கின்றன. இவை, ஒரு நவீனச் சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் இளம் தலைமுறையின் தாக்கத்தையும் ஈடுபாட்டையும் உணர்த்துகின்றன.
உயர்தரக் கல்வி – எதிர்காலத்திற்கு அடித்தளம்
சிங்கப்பூர், உயர்தர கல்வியை மிகுந்த முக்கியத்துவத்துடன் பார்ப்பதோடு, உலகளாவியத் தரத்தில் பல்வேறு முறையில் மாற்றங்களைக் கொண்டுவந்து மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்கிறது.
- National University of Singapore (NUS), Nanyang Technological University (NTU) உள்ளிட்ட பல முன்னணிப் பல்கலைக்கழகங்கள் உலகத் தரவரிசையில் சிறப்பான இடங்களைப் பிடித்துள்ளன.
- Polytechnics & ITEs தொழில்முறைத் திறன்களில் முழுமையான பயிற்சிகளை வழங்குகின்றன, இது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு போன்ற வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளமாக அமைகிறது.
- SkillsFuture போன்ற lifelong learning திட்டங்கள் மூலம் இளம் தலைமுறைகள் தொடர்ந்து தங்களை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
- கல்வி மட்டும் அல்லாமல் கற்பதையும் கற்றதையும் சமூகத்துடன் பகிரும், சிக்கல்களைத் தீர்க்கும் (problem-solving skills) திறன்களையும் வளர்க்கும் படிப்புகள் மூலம், இளம் தலைமுறைகள் அறம் மற்றும் அறிவுடன் பூரணமாக வளர்கின்றனர். சிங்கப்பூரின் கல்வி அமைப்பு, அறிவை மட்டும் அல்ல, அறிவுசார் வினைத்திறனை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மாணவர்கள் Project-based Learning, Research immersion, Overseas Exchange Programs போன்ற வாய்ப்புகள் மூலம் சுயமேம்பாடு, தொடர்கல்விப் பாடத்திட்டங்கள், அணுகுமுறை திறன் ஆகியவற்றை மேம்படுத்துகிறார்கள்.
தொழில்முனைவு மற்றும் தொழில் வளர்ச்சிக்கானச் சூழ்நிலை
ஊக்கமளிக்கும் வணிகச் சூழ்நிலையை உருவாக்கி, இளையோர்களை தொழில்முனைவர்களாக வளர்க்கும் நோக்கத்தில் பலதரப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது சிங்கப்பூர் அரசு. Start-up friendly ecosystem-ஐ உருவாக்கி, இளையோர் தங்கள் தொழில்முனைவு கனவுகளை நனவாக்க ஏராளமான ஆதரவுகளை வழங்குகிறது.
- Startup SG, Enterprise Development Grant, Young Entrepreneurs Scheme, Enterprise Singapore, Action Community for Entrepreneurship போன்ற நிறுவனங்கள் மூலம் பங்கு முதலீடுகள், பயிற்சி, வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்படுகின்றன.
- சிறு தொழில்களில் தொடங்கி Tech Startups, Green Ventures, EdTech & MedTech போன்ற புதிய துறைகளில் வெற்றி காணும் இளைஞர்கள், புத்தாக்கத்திற்கும் சமூக சேவைக்கும் பாலமாக அமைகின்றனர்.
- Fintech, Greentech, Biotech போன்ற வளரும் துறைகள் இளம் தலைமுறைக்கு புதுமை செய்யும் களமாக விளங்குகின்றன.
- சுயதொழில் மற்றும் Digital Economy-ல் freelancing, e-commerce, content creation ஆகியவையும் புதிய வாய்ப்புகளாக உருவெடுத்துள்ளன.
- Co-working spaces, accelerators மற்றும் hackathons ஆகியவை அவர்களின் முயற்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கின்றன.
திறன் மேம்பாடு, வாழ்வும் வாழ்வாதாரமும் மற்றும் தன்னிறைவு
இன்றைய உலகம் மாறிவரும் தொழில்நுட்ப நிலைகளுக்கேற்ப புதிய திறன்களை நாடுகிறது. இன்றைய உலகம் பெரும்பாலும் மாறிவரும் சூழல்களின் சவால்களைச் சந்தித்து வெற்றிகாணக்கூடிய திறன்களின் அடிப்படையில் இயங்குகிறது. சிங்கப்பூர் இளைஞர்களுக்கு இந்த மாற்றங்களை எதிர்கொள்வதற்கானப் பல தளங்களை உருவாக்கியுள்ளது. இளைஞர்கள், இத்தகைய மாற்றங்களை முன்னறிந்து, தொடர்ந்து கற்றுக்கொண்டு தங்களை மேம்படுத்துகின்றனர்.
SkillsFuture Credit, WSG Programmes, Polytechnic/ITE based upskilling ஆகியவை career conversion-க்கும், skill specialisation-க்கும் உகந்த வாய்ப்புகளை அளிக்கின்றன. AI, Data Analytics, Cybersecurity, UX/UI Design போன்ற தொழில்நுட்பத் துறைகளில் சிங்கப்பூர் இளையோர் அதிகமாக ஈடுபடுகிறார்கள்.
இவை அவர்களுக்கு வேலைவாய்ப்பு மட்டும் அல்ல, சுதந்திரமான வாழ்க்கைமுறைக்கும் சிறப்பாக வழிகாட்டுகின்றன.
- SkillsFuture Initiative மூலம் தனிநபர் கடனில்லா பயிற்சிகள், சான்றிதழ் வகுப்புகள், தொழில் மாற்றக் கோர்ஸ்கள் என பலவகை வாய்ப்புகள் உள்ளன.
- Data Science, Artificial Intelligence, Blockchain, Sustainable Engineering போன்ற நவீனத் துறைகளில் வல்லுநர்களாக உருவாக இளையோர்களுக்கு அதிகாரபூர்வ பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
- Micro-credentials மற்றும் modular learning pathways வழியாக தொழில்நுட்பமும் மனிதநேயமும் இணைந்த புதிய தலைமுறை உருவாகிறது.
உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் போட்டிக்கு தயாராகும் இளைஞர்கள்
சிங்கப்பூர் இளையோர், பன்னாட்டு விழிப்புணர்வு, பல்கலாசார புரிதல், மற்றும் அறம் சார்ந்த பங்களிப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் காண்கிறார்கள். சிங்கப்பூர் இளைஞர்கள், உலகளாவிய பார்வையை வளர்க்கும் வகையில் பன்னாட்டு திட்டங்களில் பங்கேற்கின்றனர்.
ASEAN Youth Summit, UN Model Conferences, Commonwealth Youth Forums, Global Youth Summits போன்ற நிகழ்வுகள் இளையோரை தலைமைத்துவம், ஒத்துழைப்பு, மனிதநேயக் கண்ணோட்டம் ஆகியவற்றில் சிறப்பாகப் பங்காற்றும் வகையில் வளர்க்கின்றன. ASEAN Youth Fellowship, UN Youth Delegate Program போன்ற வாயில்கள் மூலம் உலகளாவியப் பார்வை கிடைக்கின்றது.
Bilingualism Policy காரணமாக இவர்கள் பல மொழிகளில் திறமையடைய, பல கலாசாரங்களைப் புரிந்துகொண்டு ஆங்கிலத்திலும் தாய்மொழிகளிலும் திறமையை வளர்த்து, சர்வதேச அளவிலும், உள்ளூர் பண்பாட்டிலும் திறம்பட இயங்கக் கூடியவர்களாக மாறுகின்றனர். Digital nomads, remote jobs, cross-border collaborations போன்றவை இளையோர்களின் உலகளாவிய தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்றன.
சமூக சேவை, சமூக நீதிக்கும் பங்களிப்பு
வளர்ந்த நாட்டு சமூகமாக இருந்தாலும், சிங்கப்பூர் இளையோர் மற்றவர்களின் நலனுக்காக உழைக்கும் எண்ணத்தைப் பின்பற்றுகின்றனர்.
- Youth Corps Singapore, Ground-up Movements, Voluntary Welfare Organisations ஆகியவை இளையோரை சமூக சேவை, மனநலம், வசதியற்ற மக்களுக்கு உதவுதல் போன்ற துறைகளில் செயல்பட வைக்கின்றன.
- Social Innovation Projects, Community Leadership Programs மூலம் இளைஞர்கள் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனநலம், மாறுபட்ட மக்களுக்கான சேவை ஆகிய துறைகளில் இவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
- இது அவர்களின் மனிதநேயத்தை வளர்த்தது மட்டுமல்ல, பொதுமக்களிடையே உணர்வுப் பிணைப்பு ஏற்படுத்தும் வகையில் ஒரு உந்துசக்தியாகவும் அமைகிறது.
கலை, ஊடகம் மற்றும் சுய-திறமை வெளிப்பாடுகள்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், கலை மற்றும் ஊடகங்களில் தங்களை வெளிப்படுத்தும் இளைஞர்கள் சமூக-ஊக்கமளிக்கும், சுயதிறனை வளர்க்கும் வழிகளை தேடுகின்றனர். நவீன சமூகத்தில் கலை, ஊடகம் மற்றும் Digital Creation மூலமாகவும் இளைஞர்கள் பற்பல சாதனைகளைப் புரிகின்றனர்.
National Arts Council, Esplanade Youth Programs, YouTube, TikTok, Instagram content creation ஆகியவைகள் இளையோர் திறமைகளை நிகழ்ச்சி வடிவில், கல்வி வழியாக, அல்லது படைப்பாற்றலாக வெளிக்கொணர உதவுகின்றன. இவை, திறமையான வேலைவாய்ப்புகளாகவும், தனிச்சிறப்பாகவும் விளங்குகின்றன.
YouTube, Instagram, TikTok போன்ற தளங்களில் digital storytelling, education, entertainment சார்ந்த கருத்துக்களை உருவாக்கி சமூகப் பிரபலமும், அதிக வருமானமும் பெறுகின்றனர். இவை, பண்பாட்டுத் தனிச்சிறப்பையும், சமூக ஒற்றுமையையும் வளர்க்கும் பங்களிப்புகளாக மாறுகின்றன.
தேசிய சேவை – ஒழுக்கமும் ஒற்றுமையும் வளர்க்கும் களமாக உள்ளது
சிங்கப்பூர் இளையோருக்கான National Service (NS), வெறும் பாதுகாப்பு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், நாட்டுப்பற்று, ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றை உணர்த்தும் மனோதத்துவ பயிற்சி மையமாகும். SAF, SPF, SCDF ஆகியவற்றில் சேவை புரிவதன் மூலம் தொழில்முறை அனுபவமும், தலையாய பொறுப்புணர்வும் அவர்களுடன் சேர்ந்தே வளர்கின்றன. இதனால் இளைஞர்கள் உறுதி, ஒழுக்கம், திட்டமிடல், அணுகுமுறைத் திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்கள்.
சிங்கப்பூர் நவீனச் சமூகத்தில் இளையோருக்கான வெற்றி வாய்ப்புகள் பல பரிமாணங்களில் விரிந்துள்ளன. கல்வி, தொழில், சமூகச் சேவை, உலகளாவியப் பங்கேற்பு, தொழில்முனைவு, மற்றும் கலை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை, அவர்களின் திறனையும் நம்பிக்கையையும் வளர்த்து, ஒரு திறமையான, பொறுப்புள்ள, உலகத்தோடு ஒத்துழைக்கும் தலைமுறையை உருவாக்குகின்றன. மேலும் சிங்கப்பூரில் இளைய தலைமுறைக்கு வழங்கப்படும் வெற்றி வாய்ப்புகள், அவர்களை முழுமையாகச் சுயநலம் இல்லாத சமூகத்துக்குப் பங்களிக்கவும் மற்றும் உலகளவில் போட்டியிடக்கூடியத் தலைவர்களாகவும் உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன.
இளைஞர்கள் தங்களது வாய்ப்புகளை நன்கு அறிந்து, முயன்று, சிந்தித்து செயல்படும்போது, சிங்கப்பூர் மாதிரியான நவீனச் சமூகங்கள் எதிர்கால உலகுகிற்கானச் சிறந்த வழிகாட்டியாக முடியும் என்ற நம்பிக்கை நமக்கு மேலோங்குகிறது.
SG60 – தேசிய அடையாளத்தின் பிரதிபலிப்பு:
2025 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனது 60-வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்த SG60 கொண்டாட்டங்கள், நாடு கடந்த அறுபது வருடங்களில் அடைந்த சாதனைகளையும், எதிர்கால வளர்ச்சிக்கான இலக்குகளையும் நினைவூட்டும் ஒரு முக்கியமான நிகழ்வாக இதுஅமைந்துள்ளது.
SG60 என்பது வெறும் பிறந்தநாள் கொண்டாட்டம் அல்ல. இது சிங்கப்பூர் மக்களின் ஒற்றுமை, பங்களிப்பு, முன்னேற்றம் மற்றும் உறுதியான மனப்பாங்கின் கொண்டாட்டமாகும். அறுபது ஆண்டுகளில் ஒரு கடற்கரைச் சிறு நகரிலிருந்து உலகத் தளத்தில் பெரும் பொருளாதார மையமாக, வளர்ச்சியடைந்த நாடாகத் தற்போது மாறியுள்ளது. பலதரப்பட்ட இன, மத, கலாசார மக்களை இணைத்து நல்லிணக்கச் சமத்துவத்தை நிலைநாட்டியுள்ளது. கல்வி, தொழில்நுட்பம், தொழில் வளர்ச்சி, நகரமைப்பு உள்ளிட்ட துறைகளில் உலகளவில் முன்னோடியாகியுள்ளது.
SG60 என்பது வெறும் கடந்துபோன வரலாற்றைப் பாராட்டுவது மட்டுமல்ல. இது தெளிவான எதிர்கால நோக்குடன், நவீனச் சிங்கப்பூர்க் கட்டமைப்பில் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் உறுதிசெய்யும் தொடக்கமாகும். “Stronger Together, Brighter Tomorrow” என்றக் கருப்பொருளில் மக்கள், அரசு, நிறுவனங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. SG60 என்பது சிங்கப்பூரின் வெற்றிப்பயணத்திற்கும், எதிர்காலத் தலைமைத்துவக் கனவிற்கும் இடையே ஒரு நேர் பாலமாக அமைகிறது. இன்றைய இளைஞர்கள், புதுத் தலைமுறைகள் இந்த வரலாற்றுப் பயணத்தில் அவர்களது பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில், உருவாக்கியப் பாரம்பரியத்தில் புதிய மையக் கோடுகளை சேர்க்கும் நேரமாகும்.
வாழ்க சிங்கப்பூர் – வளர்க உலகத் தலைமையின் அடையாளமாக…!


