காரில், எதிர் திசையில் வந்து போலீசை கொல்ல முயன்ற சம்பவம் கோலாலம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மலேசியாவின் செலாங்கர் மாநிலத்தில் இருக்கிறது தமன்சாரா – புச்சோக் தேசிய நெடுஞ்சாலை. இங்கு வியாழக்கிழமை மதியம் 2:35 மணியளவில் சொகுசு கார் ஒன்று எதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட போலீசாரர் ஒருவர், அதிர்ச்சி அடைந்து அந்த காரை விரட்டினார். போலீசைக் கண்டதும் கார் டிரைவர், அவர் மீது மோதுவது போல வேகமாக வந்தார். இதையடுத்து மின்னல் வேகத்தில்…

