சிங்கப்பூரில் மரங்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளதை பிரதமர் லீ மற்றும் துணைப் பிரதமர் ஹெங் இருவரும் கவனப்படுத்தியுள்ளனர். பிரதமர் லீ தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் சுற்றுப்புறத் தாவரங்கள் பூத்துள்ளதை படம்பிடித்து தன் பதிவின்கீழ் பதிவிட கேட்டுக்கொண்டுள்ளார். “வார இறுதியில், சிங்கப்பூர் முழுவதும் உள்ள தோட்டங்கள் மற்றும் அண்டை பூங்காக்களிலுள்ள மரம், செடி, கொடிகள் அழகான வண்ணமயமான வண்ணங்களில் மிளிர்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஜப்பானின் புகழ்பெற்ற சகுரா மலர்களைப் போலத் தோன்றும் இந்தப் பூக்களைக் காண…

